சிட் பண்ட் என்பது ஒரு கூட்டு சேமிப்பு திட்டம். இதில் ஒரு குழுவினர் கலந்து கொண்டு ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒப்புக்கொள்ளப்பட்ட காலம் வரை செலுத்துகின்றனர். இந்த தொகையை செலுத்தும் சந்தாதாரர்கள் சீட்டு திட்ட காலத்தில், ஒரு முறை இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை ஆதாயத்துடன் பெறலாம். எனவே, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும், செலுத்தப்படும் தவணைகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். ஒவ்வொரு தவணையின் போதும் தொகையை பெறுபவர்கள் ஏலம் அல்லது குலுக்கல் முறை மூலம் தேர்ந்ததெடுக்கப்படுவார்கள்.
ஒரு சீட்டு நிறுவனம், சீட்டு திட்டத்தை நடத்தி நிர்வகித்து வருகிறது. குழுவில் சேர்ப்பதற்கான தகுதியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து திரட்டப்படும் முதலீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு தவணையிலும், தொகையை பெறும் நபரை ஏலம் நடத்தி தேர்ந்தெடுக்கிறது. சந்தாதாரர்களுக்கு தொகையை திரும்ப அளிப்பதற்கு உத்திரவாதம் அளித்து, அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கிறது. இந்த சேவைகளுக்காக சீட்டு கம்பெனி ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது.
சீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் வங்கி டெபாசிட்டுகளை காட்டிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். இரண்டாவது மாதத்திலிருந்தே தொகையை பெற முடிவதால் வர்த்தகத்திற்கு தேவைப்படும் தொகையை திரட்டி கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களது அவசர கால தேவைகள் அல்லது வர்த்தக முதலீட்டை செய்ய பணம் தேவைப்படும் போது சீட்டு பணத்தை எடுக்கலாம். மேலும் இதர முதலீட்டில் அதிக ஆதயாம் கிடைக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வதற்கும் இந்த சீட்டு தொகையை எடுக்கலாம்.
40/1982-ஆம் வருட சீட்டு கம்பெனி நிதியங்கள் கீழ் சீட்டு கம்பெனிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன சட்டப்படி முதல் மாதத்தில் திரட்டப்படும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகை 1982-ஆம் ஆண்டு சீட்டு நிதியங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது இந்த சட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யாமல் இயங்கி வருகின்றன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலும், சில கம்பெனிகள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. எனினும், நம்பகமான நிறுவனர்களின் ஆதரவுடன் செயல்படும் நிறுவனத்தில் வாடிக்கையாளர் முதலீடு செய்தால் அந்த தொகை பாதுகாப்பாக இருக்கும்.
கைப்பெட்டி சிட்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனை இலக்காக கொண்டது. இதன் விதிமுறைகள் வெளிப்படையானவை. இந்நிறுவனம் நம்பகமான மற்றும் பிரபலமான நிறுவனர்களால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் 1982-ஆம் வருட சீட்டு நிதியங்கள் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
© Kaiypeti Chits Pvt Ltd | Web Solution by Blazon